செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயிலில் போலீஸார் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 19.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயிலில் போலீஸார் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி, 19.5 கிலோ எடையிலான வெள்ளிப்பொருட்கள் எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.19 லட்சம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கமலேஷ், லோகேஷ் ஆகிய இருவரிடம் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலங்கானா உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருளாக வழங்க எடுத்து செல்லப்பட்டதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!