அதிர்ச்சி.... இமாச்சல்லில் பாரா கிளைடிங் பயிற்சியில் விபத்து... 9 நாட்களில் 3-வது விமானி பலி!

By காமதேனு

இமாச்சல் பிரதேசத்தில் பாரா கிளைடிங் பயிற்சியில் 9 நாட்களில் மூன்றாவதாக ரஷ்யாவைச் சேர்ந்த விமானி பலியாகியுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரா கிளைடிங் பயிற்சி

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பாரா கிளைடிங் தளமான பிர் பில்லிங்க் உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், விமானிகள் இங்கு பயிற்சி பெறுகின்றனர். இந்த பாரா கிளைடிங் பயிற்சி மையத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த விமானி ஸ்டோய்கோ பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஸ்டோய்கோ வியாழனன்று காணாமல் போனார்.

இதையடுத்து பில்லிங்ஸ் பாராகிளைடிங் சங்கத்தின் மீட்புக்குழுவினர் சந்தீப் கபூர் தலைமையில் விமானியைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், நன்ஹருக்கு மேல் 3300 மீட்டர் உயரத்தில் ரஷ்ய விமானி ஸ்டோய்கா உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் 9 நாட்களில் மூன்றாவது விமானி மரணடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாரா கிளைடிங்கின் பயிற்சியில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE