ஷாக்... இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்த டெலிவரி பாய்... சுட்டுப்பிடித்த போலீஸார்!

By காமதேனு

ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்த இளம்பெண்ணை டெலிவரி பாய் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமத் சிங்கை இழுத்து வரும் போலீஸார்.

உத்தரப்பிரதேசம் நொய்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதனை டெலிவரி செய்ய சுமத் சிங் என்பவர் நியமிக்கப்பட்டதாக தெரிகிறது. மளிகைப் பொருட்களை கொடுக்க வந்த சுமத் சிங், வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருப்பதை உணர்ந்துள்ளார்.

மளிகைப் பொருட்கள் கொடுக்கும் சாக்கில் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார். அந்த பெண் கத்தி கூச்சலிடவே அவரை சுமத் சிங் அடித்து துன்புறுத்தி அவரை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமும் வெளியே கூறக்கூடாது என மிரட்டி சென்றுள்ளார். ஆனால் சம்பவம் தொடர்பாக இளம்பெண் தனது வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில், சுமித் தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. சுமித்தைப் பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கிரேட்டர் நொய்டா பகுதியில் சுமத் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அந்த இடத்திற்கு போலீஸார் சென்ற நிலையில் சுமத் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீஸாரை சுட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸார் சுமத் மீது சுட்டத்தில் அவரது வலது காலில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.

சுமத் சிங்கை மடக்கிப்பிடித்து போலீஸார் கைது செய்தனர். சுமத் மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்த இளம்பெண்ணை டெலிவரி பாய் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு

நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!

சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE