திருமணம் ஆகாமலே கர்ப்பமான இளம் பெண்ணின் 28 வார கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என அந்தப் பெண்ணுக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், தனது நண்பருடன் உறவு கொண்டதில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமானார். அண்மையில் தான் இந்த விஷயம் அந்தப் பெண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது அவரது வயிற்றில் இருந்த கரு 27 வாரங்கள் வளர்ச்சியடைந்திருந்தது தெரியவந்தது. ஆனாலும் தனது கருவை கலைக்க வேண்டும் என அவர் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கருக்கலைப்புச் சட்டப்படி 24 வாரங்களுக்கும் கீழ் வளர்ந்த கருவை மட்டுமே கலைக்கமுடியும் என்பதால் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மற்றுத்துள்ளனர். இதனால் தனது கருவை கலைக்க அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்தப் பெண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தான் கர்ப்பமாக இருப்பது தனது குடும்பத்தினருக்கு தெரியாது எனவும், தன்னுடைய உடல்நிலை, மனநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எனது கருவை கலைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த வியாழனன்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்த நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத். “ முழுமையாக வளர்ந்த 28 வார கருவை கலைக்க அனுமதி அளிக்க முடியாது” என உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை இன்று வழங்கிய அவர், கருவை கலைக்கக் கோரிய பெண்ணின் மனுவை நிராகரித்ததுடன் ”மருத்துவ பரிசோதனை அறிக்கையின் கீழ் அந்த பெண்ணின் உடலில் வளரும் கரு, முழு ஆரோக்கியத்துடன் உள்ளது. எனவே தனது வயிற்றில் வளரும் கருவை இந்தப் பெண் கட்டாயமாக சுமக்க வேண்டும். தேவைப்பட்டால் மேல் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லலாம்” என்று உத்தரவிட்டார்.
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள எம்டிபி சட்டத்தின் கீழ், கணவர் இறந்துவிட்டாலோ, அல்லது விவாகரத்து ஏற்பட்டு விட்டாலோ கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கும். அதேபோல் பாலியல் வன்கொடுமை மற்றும் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டால் 20 முதல் 24 வாரங்கள் வரை வளர்ந்த கருவை மட்டும் கலைக்க அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
'இந்திய இசைக்குழுவினருக்கு ‘கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!
அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!
ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!
நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்... அரசியலில் பரபரப்பு!
ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!