ரிஷிவந்தியம் அருகே மீன் வலையில் சிக்கிய 8 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள வாணாபுரம் பெரிய ஏரியில், மீன் குத்தகை விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் மீன் வெளியேறாமல் இருக்க போடப்பட்ட வலையில் சுமார் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று வலையில் சிக்கிக்கொண்டது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மீட்பு உபகரணங்களுடன் அங்கு வந்த தீயணைப்பு படையினர், வலையை அறுத்து, மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர், சங்கராபுரம் அருகே உள்ள காப்பு காட்டில் மலைப்பாம்பை பத்திரமாக விடுவித்தனர்.
மீன் வலையில் மலைப்பாம்பு சிக்கியதை காண ஏராளமானோர் ஏரியின் அருகே திரண்டதால் பரபரப்பு நிலவியது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?
வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!
அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!
தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!
கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!