சொந்த வீட்டில் கன்னம் வைத்த பெண்... தங்கை திருமணத்துக்கான நகை, ரொக்கத்தை கொள்ளையடித்த நூதனம்

By காமதேனு

டெல்லியில் சொந்த வீட்டில் நூதன முறையில் கொள்ளையடித்த பெண் ஒருவர், போலீஸாரின் தீவிர விசாரணையில் சிக்கினார்.

தன்னைவிட தங்கை மீதே தனது தாய் அதிகம் பாசம் காட்டுவதாக குமைந்த பெண் ஒருவர், தங்கையின் திருமணத்துக்கான நகை மற்றும் ரொக்கத்தை மாறுவேடத்தில் வீடு புகுந்து திருடியிருக்கிறார்.

டெல்லி உத்தம் நகர் சேவக் பார்க் பகுதியில் வசிக்கும் கமலேஷ் என்ற பெண்மணி, தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜனவரி 30 அன்று நண்பகல் வேளையில், தான் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த பல லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளை போனதாக கமலேஷ் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

கொள்ளை சம்பவம்

டெல்லி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கொள்ளையர் எவரும் வீட்டுக்குள் பலப்பிரயோகம் நடத்தி நுழையவில்லை என்பதை கண்டறிந்தனர். கதவுகள், பூட்டுகள் எதுவும் சேதமடையவில்லை; நகை ரொக்கத்தைத் துழாவி வீட்டை எவரும் கலைக்கவில்லை. எனவே குடும்பத்துடன் தொடர்புடைய எவரோ கொள்ளையை நடத்தியிருக்க வேண்டும் என்று போலீஸார் முடிவுக்கு வந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியின் சிசிடிவி கேமாரா பகுதிகளை சோதனையிட்டதில் பர்தா அணிந்த ஒரு பெண்ணின் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் தென்பட்டது. மேலும் அந்த பதிவுகள் பர்தார் பெண், அப்பகுதியின் பொதுக்கழிவறை ஒன்றிலிருந்து வெளிப்பட்டதை உறுதி செய்தது. ஆனால் அந்த பர்தா அணிந்த சந்தேகப் பெண் கழிவறைக்குள் நுழைந்ததற்கான ஆதாரமில்லை. அதே வேளையில், கமலேஷின் மூத்த மகளான ஸ்வேதா என்பவர் கழிவறையில் நுழைந்ததையும், ஆனால் அவர் வெளியே வராததையும் சிசிடிவி பதிவுகள் உறுதி செய்தன. எனவே கழிவறைக்குள் நுழைந்த ஸ்வேதா பர்தா அணிந்து வெளிப்பட்டதுடன், சொந்த வீட்டில் கன்னம் வைத்தது அம்பலமானது.

ஸ்வேதாவிடம் கைப்பற்றப்பட்ட பர்தா மற்றும் பகுதியளவு நகை, ரொக்கம்

ஆதாரத்துடன் போலீஸார் விசாரித்ததும், ஸ்வேதா சொந்த வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். தன்னைவிட தனது தங்கையின் மீதே தாயார் பாசமாக இருந்ததால் சிறு வயதிலிருந்தே ஸ்வேதா பொறாமையுடன் வளர்ந்திருந்தார். மேலும் ஊதாரியான ஸ்வேதாவுக்கு வெளியே கடன்களும் அதிகரித்திருந்தன. இது மட்டுமன்றி தனக்கான நகைகள் சிலதையும், தங்கைக்காக தாய் ஒதுக்க்கியதாக ஸ்வேதா குற்றம்சாட்டினார்.

இதன் விளைவாக, வேலை விஷயமாக வெளியே செல்வதாக குடும்பத்தாரிடம் போக்குகாட்டி ஸ்வேதா, பின்னர் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் மாற்று சாவி போட்டு வீட்டைத் திறந்து, தங்கையின் திருமணத்துக்காக தாய் சேகரித்து வைத்திருந்த நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்தார். பின்னர் ஏதுமறியாதவர் போன்று தாயுடன் இணைந்து காவல் நிலையத்தில் புகாரளித்ததுடன், விசாரணைக்கும் உதவி வந்திருக்கிறார். 5 நாள் விசாரணையில் ஆதாரங்களோடு சிக்கிய ஸ்வேதாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்... அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE