பரபரப்பு... கோவையில் களவு போகும் கனிமவளம்... கேரளாவிற்கு கடத்திய 8 லாரிகள் பறிமுதல்!

By காமதேனு

கோவையில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களைக் கடத்திச் சென்ற 8 லாரிகளைச் சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களை லாரிகளில் கடத்திச் செல்வதாக சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கிணத்துக்கடவு வீரப்ப கவுண்டனூர் சோதனை சாவடியில் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் கற்களை ஏற்றிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கேரளா லாரிகள்.

இதே போல சுரங்க துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் மதுக்கரை அருகே சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களைக் கடத்திச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் வாளையார் சோதனைச் சாவடியில் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் கற்களை ஏற்றிச் சென்ற 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கேரளா லாரிகள்.

நேற்று ஒரே நாளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கற்களை கடத்தி சென்ற 8 லாரிகளை சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை

நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!

3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!

5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!

நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE