அதிர்ச்சி...மின்வேலியில் சிக்கி பலியான புலி... தலை, கால்களை வெட்டி எடுத்துச் சென்ற கும்பல்!

By காமதேனு

மகாராஷ்டிராவில் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த புலியின் தலை மற்றும் கால்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் கட்சிரோலி வனப்பகுதி அருகே உள்ளது சட்கோன் கிராமம். இங்கு அடிக்கடி புலியின் நடமாட்டம் இருந்து வருவதால் அதனைத் தவிர்ப்பதற்காக விளைநிலங்களுக்கு அருகில் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு புலி ஒன்று இந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தது. இந்த புலியின் உடம்பில் இருந்து பல் மற்றும் நகங்கள் ஆகியவற்றை எடுப்பதற்காக, அதன் தலை மற்றும் கால்களைச் சிலர் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். தலை மற்றும் கால்களின்றி கிடந்த புலியின் உடலை மீட்டுள்ள வனத்துறையினர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த புலி

புலி எதிர்பாராமல் மின்சார வேலியில் சிக்கியதா அல்லது வேட்டைக்காரர்கள் புலியைக் கொலை செய்யும் நோக்கோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 18 சிறுத்தைகள், 16 புலிகள் மற்றும் 11 கரடிகள் மின்வேலிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன.

புலி(பைல் படம்)

இதையும் வாசிக்கலாமே...


வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை

நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!

3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!

5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!

நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE