சிதம்பரத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி வேனில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்த குழந்தைகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சிதம்பரம் புறவழி சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளைத் தினந்தோறும் பள்ளியின் வாகனங்களில் அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை பரங்கிப்பேட்டை, முட்லூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிதம்பரத்தில் இருக்கும் பள்ளிக்கு வேன் வந்து கொண்டிருந்தது. வேனில் 20 குழந்தைகள் இருந்துள்ளனர்.
இந்த வேன் பி முட்லூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென வேனில் தீப்பொறி கிளம்பி தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளை அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் பள்ளி வேனில் தீ மளமளவென பரவி வேன் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு; கேரளத்தில் மீண்டும் பரபரப்பு!
அதிர்ச்சி... தூக்கில் தொங்கிய 10 ம் வகுப்பு மாணவி! மர்ம மரணமாக போலீஸார் விசாரணை!
பெரும் சோகம்... டேங்கர் லாரியை மறைத்த பனிமூட்டம்... விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!
தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலியான பரிதாபம், 50 பேர் காயம்