விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சாஸ்தாகோவில் அணை. நீரோடைகள் மற்றும் குளங்கள் உள்ள பகுதி என்பதால், ராஜபாளையம், சேத்தூர், முகவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் இந்த பகுதியில் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக வருகின்றனர்.
இந்த நிலையில் சாஸ்தா கோயில் அணை மற்றும் சாஸ்தா கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அடிவாரப் பகுதி வரை யானைகள் வருகை அதிகரித்து காணபடுகிறது. கோயிலின் அருகிலேயே தற்போது யானைகள் தனியாகவும் கூட்டமாகவும் உலாவி வருகின்றன.
இதனால் நீரோடை பகுதிக்கு வருபவர்கள், அணைப்பகுதி அருகே விவசாயம் செய்யும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் வனப்பகுதியை கடக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!