சென்னை: தடை செய்யப்பட்ட இ-சிகரெட் விற்பனை செய்ததாக சென்னையில் இருவர் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யுமாறு அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
அதன்படி, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இ.எச். சாலையில் 2 பேர் இ-சிகரெட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இ-சிகரெட் விற்பனை செய்த மண்ணடி முகமது ஜஃபுருல்லா (30), அவரது கூட்டாளி அபுதாகீர் (36) இருவரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக அவர்களிடம் இருந்து 476 இ-சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
» கன்டெய்னர் லாரியிலிருந்து கால்நடைகள் மீட்பு: சட்டவிரோதமாக கடத்தப்பட்டதா என போலீஸார் விசாரணை
» திமுக - பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகிவிட்டது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கருத்து