மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: குஜராத் மதரஸா ஆசிரியர் கைது

By காமதேனு

குஜராத்தில் மதரஸாவில் பயின்று வரும் 10 மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அப்பள்ளியின் ஆசிரியர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஜூனாகத் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதரஸாவில் 10 மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து புகார் பெறப்பட்டது. இதன் அடிப்படையில் அப்பள்ளியின் ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதரஸாவின் அறங்காவலரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விஷயத் தில் அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளி யில் சொல்லக்கூடாது என மாணவர்கள் மிரட்டப் பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களுக்கு உடந்தை யாக இருந்ததாக அந்த 55 வயது அறங்காவலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE