ஆவடி: சென்னை, அம்பத்தூர், ராமாபுரம்பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(50). இவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவிரேணுகாதேவிக்கு கடந்த 2021-ம்ஆண்டு, சென்னை, ஆதம்பாக்கம், பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தகார்த்திகேயன்(33) என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவர், தனக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தெரியும் என்பதால், ரேணுகாதேவியின் உறவினர் கண்ணன் என்ற மாற்றுத் திறனாளிக்கு அரசுப் பணி வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, கண்ணனுக்கு அரசுப் பணிக்காக கார்த்திகேயனிடம் ரூ.3 லட்சம் பணத்தை ரேணுகாதேவி கொடுத்துள்ளார். பின்னர் கார்த்திகேயன் சென்னை, அண்ணாநகரில் ஒரு கோடி ரூபாய்மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பை ரூ.70 லட்சத்துக்கு பெற்றுத் தருவதாகவும் ஆசை காட்டியுள்ளார்.
இதை நம்பிய ராஜ்குமார் - ரேணுகாதேவி தம்பதி,கார்த்திகேயனின் வங்கிக் கணக்குக்கு ரூ.94.50 லட்சம் வரை பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால், கார்த்திகேயன் கூறியபடிசெய்யவில்லை என போலீஸில் புகார் தெரிவித்தனர். ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி கார்த்திகேயனை நேற்று கைது செய்தனர்.