இந்தியாவில் ஆண்டுக்கு 140 ராணுவ வீரர்கள் தற்கொலை... வெளியான அதிர்ச்சி தகவல்!

By காமதேனு

ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 140 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொள்வதாக இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தற்கொலை செய்த அம்ரித் பால் சிங்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் உள்ள ஒரு ராணுவ நிலையில் பணியில் இருந்த அம்ரித் பால் சிங் என்ற அக்னி வீரர் கடந்த 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து இந்திய ராணுவம் எக்ஸ் சமூக வலைதளத்தில்," தற்போதுள்ள நடைமுறைக்கு ஏற்ப, உயிரிழந்த அக்னி வீரரின் உடல் மருத்துவ மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆயுதப் படைகள், அக்னிபாதை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ வீரர்களுக்கு உரிய பலன்கள் மற்றும் மரியாதை தொடர்பாக வேறுபாடு காட்டியதில்லை.

ஆயுதப்படைகளில் துரதிர்ஷ்டவசமான தற்கொலை சம்பவங்கள் நிகழும்போது அந்த வீரரின் இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை அளிக்கப்படுவதில்லை.

கடந்த 2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 140 பேர் வரையிலான வீரர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த வீரர்களுக்கு இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான உடனடி நிதியுதவி உட்பட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுகிறது. இதற்கு முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE