அதிர்ச்சி... வெஜ் பப்ஸில் கரப்பான் பூச்சி… பேக்கரிக்கு 10,000 ரூபாய் அபராதம்!

By காமதேனு

சிவகாசியில் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட வெஜ் பப்ஸில் கரப்பான் பூச்சியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி - விருதுநகர் புறவழிச்சாலையில் ராமானுஜம் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி உள்ளது. நீண்ட காலமாக இயங்கி வரும் இந்த பேக்கரியில் வாடிக்கையாளா் ஒருவா் வெஜ் பப்ஸ் வாங்கியுள்ளார். பப்ஸை இரண்டாக பிரித்த போது, அதில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்தநிலையில் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்.

இதுகுறித்து கடை உரிமையாளரிடம் அவர் முறையிட்டதைத் தொடர்ந்து, அவருக்கு வேறு பப்ஸ் வழங்கியுள்ளனர். ஆனால், வாடிக்கையாளர் உடனடியாக மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தார்.

அதைத்தொடந்து அங்கு வந்த மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா், பேக்கரியை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அதற்கான நோட்டீஸ் வழங்கினார். தொடர்ந்து, தரமற்ற உணவை கொடுத்ததிற்காக ரூ.10,000 அபராதம் விதித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE