நிலத்தகராறு காரணமாக கோலார் காங்கிரஸ் தலைவரை வெட்டிக் கொன்ற குற்றவாளிகளை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் கோலாரில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கோலார் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீனிவாஸ், வேணுகோபால். இவர்கள் இருவரும் கர்நாடகா முன்னாள் சட்டமன்ற பேரவைத் தலைவர் ரமேஷ் குமாரின் நெருங்கிய உதவியாளர்களாக இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக ஸ்ரீனிவாஸ், வேணுகோபால் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் ஸ்ரீனிவாஸ்பூர் புறநகரில் உள்ள ஹோகலகெரே சாலையில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ஸ்ரீனிவாஸ் பார் மற்றும் உணவகம் கட்டி வந்தார்.
இதனால் கோபமடைந்த வேணுகோபால், தனது ஆட்களுடன் சேர்ந்து ஸ்ரீனிவாஸை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் நேற்று கொடூரமாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஸ்ரீனிவாஸ் கோலார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கர்நாடகா உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வரின் உதவியாளராக ஸ்ரீனிவாஸ் இருந்ததுடன், கோலார் பகுதி காங்கிரஸ் கட்சி தலைவராகவும் தற்போது இருந்து வந்தார். அவரது உடலுக்கு கர்நாடகா உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா, ரமேஷ்குமார் மற்றும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீனிவாஸ் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீனிவாஸை கொலை செய்தவர்கள் லட்சுமிசாகர் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு இன்று தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் சென்ற போது, அவர்களை நோக்கி அந்தக் கும்பல் திடீரென துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்றது. இதனால் போலீஸார், எதிர் தாக்குதல் நடத்தினர்.
இதில் மூன்று குற்றவாளிகளின் கால்களிலும் குண்டு பாயந்தது. அத்துடன் குற்றவாளிகள் சுட்டதில், காவல் ஆய்வாளர் ஒருவர் உள்பட மூன்று போலீஸாரும் காயமடைந்தனர். இதையடுத்து துப்பாக்கிக் குண்டு காயம் அடைந்த வேணுகோபால், அவரது கூட்டாளிகள் முனிந்திரா, சந்தோஷ் ஆகியோரும், 3 போலீஸாரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு