வானில் திடீரென கேட்ட பயங்கர வெடிச்சத்தம்... 30 கிராம மக்களிடையே பெரும் அச்சம்

By காமதேனு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு 30 கிராமங்களில் பலத்த வெடிச்சத்தம் கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது வானில் மர்மமான முறையில் வெடிச்சத்தம் கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளோ அல்லது வானியல் விஞ்ஞானிகளோ உரிய விளக்கத்தை இதுவரை அளிக்கவில்லை.

விமானங்கள் அதீத ஒலியுடன் சூப்பர்சானிக் வேகத்தில் பறப்பதால், சோனிக்பூம் என்ற இதுபோன்ற வெடிச்சத்தம் கேட்பது இயல்பு என தகவல்கள் பரவி வந்த போதும், அதிகாரபூர்வமாக வெடிச் சத்தத்திற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.

திடீர் வெடிச்சத்தத்தால் மக்கள் அதிர்ச்சி

இந்நிலையில் தாராபுரம் அருகிலுள்ள நேதாஜி தெரு, சின்ன கடைவீதி, மூலனூர், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 12 மணியளவில் திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, வானில் புகைமூட்டம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

சில நிமிடங்களில் மீண்டும் ஒருமுறை அதே போன்ற ஒரு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அருகாமை கிராமங்களில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் அழைத்து கேட்டபோது அவர்களும் இதே போன்று சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதிவேக ஜெட் விமானங்களில் ஏற்படும் சோனிக்பூம் (கோப்பு படம்)

சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 30 கிராமங்களில் இந்த சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் சத்தத்திற்கான காரணம் தெரியாததால் அப்பகுதி மக்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்து மக்களிடையே உள்ள அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!

செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!

நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!

லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE