அதிர்ச்சி...கங்கையில் மூழ்கடித்து 5 வயது குழந்தை கொடூரக் கொலை: மூடநம்பிக்கையால் பெற்றோர் வெறிச்செயல்!

By காமதேனு

உத்தராகண்ட் மாநிலத்தில் 5 வயது ஆண் குழந்தைக்கு ரத்தப் புற்று நோயை குணப்படுத்துவதாக பெற்றோரே கங்கை நீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து ஒரு குடும்பத்தினர் தங்கள் 5 வயது ஆண் குழந்தையுடன் உத்தராகண்ட் மாநிலம், ஹர் கி பௌரிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைக்கு ரத்த புற்று நோய் இருந்ததால் கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து குழந்தையை தண்ணீரில் வைத்து அமுக்கி எடுத்தனர்.

இதனால் அந்த குழந்தை உயிரிழந்தது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், பெண் ஒருவர், குழந்தையை நீண்ட நேரம் நீரில் மூழ்க வைப்பதும், அங்கிருந்தவர்கள் அதனைக் கண்டிப்பதையும் காணமுடிகிறது.

அப்போது அந்தப் பெண், 'இந்த குழந்தை எழுந்து நிற்கும். இது எனது வாக்குறுதி' என ஆவேசமாக கூறுகிறார். மேலும், தொடர்ந்து தண்ணீரில் மூழ்க வைத்ததும், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டனர். அப்போது ஆவேசமடைந்த அந்த பெண் குழந்தையை மீட்ட நபரை தாக்க முயன்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட குழந்தையுடன் தாய்.

இதற்கிடையே தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட குழந்தை மயக்கமடைந்தது. தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார், சம்பந்தப்பட்ட பெற்றோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கங்கை நீரில் மூழ்கடித்தால் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையில் குழந்தையை பெற்றோரே மூழ்கடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


தைப்பூச ஜோதி தரிசனம்... வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

அதிர்ச்சி... காதல் திருமணம் செய்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு!

பட்ஜெட்டில் பென்ஷன்தாரர்களுக்கு குட் நியூஸ்... புதிய சலுகைகளுக்கு மத்திய அரசு பரிசீலனை!

பிரபல தொலைக்காட்சி செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

நிதி நெருக்கடியில் தவிக்கும் பிரபல நிறுவனம்.. ₹ 8,245 கோடி இழப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE