மின்னல் வேகத்தில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட டூவீலர்கள்... பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

By காமதேனு

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணல் மேட்டை அடுத்த சடையப்ப கவுண்டன்பட்டி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, அதே திசையில் பின்னால் வேகமாக வந்த கார் இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் அதில் சென்ற 3 பேர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் சிதறி விழுந்தனர்.

அந்த கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட 3 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை காவல் நிலைய போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான பதைபதைப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE