சிவகாசியில் அதிர்ச்சி... அடுத்தடுத்து வெடித்து சிதறிய பட்டாசு ஆலைகள்; 11 பேர் உயிரிழப்பு

By காமதேனு

சிவகாசி அருகே உள்ள ரெட்டியாபட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை, எம்.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் ஆரியா பட்டாசு ஆலை என்ற பெயரில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று மதியம் ஒரு மணியளவில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை தொழிலாளர்கள் தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ பிடித்து வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் அங்கு வேலை செய்தவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். அறைக்குள் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே பட்டாசு வெடி விபத்து பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் அடுத்தடுத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பலர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!

சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்

பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!

தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்

டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE