அதிர்ச்சி... பள்ளி வளாகத்தில் பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த 5 மாணவர்கள்!

By காமதேனு

பள்ளி வளாகத்தில் பிளஸ் 1 மாணவியை அவருடன் படிக்கும் 5 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள தனியார் பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவிக்கும், அவருடன் படிக்கும் மாணவனுக்கும் நேற்று விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவியை மாணவன் அறைந்ததால் தகராறு முற்றியது.

அப்போது அந்த மாணவனுடன் படிக்கும் நண்பர்களான 4 நண்பர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்திலேயே அந்த மாணவியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், செக்டார் 39 காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த புகாரின் பேரில், ஐந்து மாணவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்துதல், வேண்டுமென்றே அவமதிப்பு மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பள்ளி வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை உதவி ஆணையர் ரஜ்னீஷ் வர்மா கூறினார். பள்ளி வளாகத்திலேயே சக மாணவர்களால் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE