செம்மரம் கடத்தல்... தமிழர்கள் உள்பட 15 பேர் அதிரடி கைது!

By காமதேனு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் கடத்தியதாக 15 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திராவில் செம்மரக்கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் 22 தமிழர்கள் உட்பட 25 பேர் செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று 15 பேர் செம்மரக் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸார் ரேணிகுண்டா ஆஞ்சநேயபுரம் சோதனைச்சாவடி, பாகராபேட்டை, ரயில்வே கோடூர் ஆகிய மூன்று பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடத்தி வரப்பட்ட 40 செம்மரக் கட்டைகள், ஒரு சரக்கு வேன், 2 கார்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த செம்மரக்கட்டைகள் மற்றும் வாகனங்கள் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE