இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழக பேராசிரியை... மீட்டுத்தர கணவர் கண்ணீர் கோரிக்கை

By காமதேனு

இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் தனது மனைவியும் திருச்சி வேளாண் கல்லூரி பேராசிரியருமான ராதிகா என்பவரை மீட்டுத்தர வேண்டும் என்று அவரது கணவரும் வேளாண் கல்லூரியின் துறைத்தலைவருமான ரமேஷ் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் காஸாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி காலையில் இஸ்ரேலை நோக்கி 5 ஆயிரம் ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தினர்.

அத்துடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த பொதுமக்கள் பலரையும் ஹமாஸ் அமைப்பினர் பணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதற்குக் கடுமையான பதிலடிகளை இஸ்ரேல் தரப்பு கொடுத்து வருகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய வெளியுறவுத்துறை ஈடுபட்டுள்ளது. இதுவரை இரண்டு முறை சிறப்பு விமானங்கள் அனுப்பப்பட்டு அங்குள்ளவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி வேளாண் கல்லூரியின் துறைத்தலைவர் ரமேஷ் என்பவர் அங்கு சிக்கியுள்ள தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் போர்

திருச்சி வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறையின் தலைவரான ரமேஷ், தனது மனைவியை மீட்டு அழைத்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “எனது மனைவி ராதிகா திருச்சி வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறையில் இணை பேராசிரியராக இருக்கிறார். அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பயிற்சிக்காக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார். தற்போது ஏற்பட்ட போர் சூழலில் அங்கு சிக்கியுள்ளார்.

தொடர்ந்து 5 நிமிடத்திற்கு ஒருமுறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்பதாகத் அவர் அச்சத்துடன் தெரிவித்தார். இதனால், அவர் தங்கியுள்ள இடத்தில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளார். எனவே, எனது மனைவியை பத்திரமாக மீட்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!

இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE