தெலுங்கானாவில் குரூப் 2 அரசு தேர்வுகள் திடீரென ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வுக்கு தயாராகி வந்த பிரவளிகா என்ற 23 வயது இளம்பெண் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஹைதராபாத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் முடிவுகள் ராஜஸ்தான், சத்தீஷ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகளுடன் இணைத்து டிசம்பர் 3ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. . இதையடுத்து, ஆளும் பிஆர்எஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க முயற்சியிலும், காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பிலும் உள்ளன. பாஜக கணிசமான இடங்களைப் பெற்று தென் மாநிலங்களில் தனது இருப்பை காட்ட போராடி வருகிறது.
தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6,7 ஆகிய தேதிகள் நடத்தப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசு ஊழியர்கள், சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால், ஒரே நேரத்தில் தேர்வை நடத்த முடியாத சூழல் இருப்பதால் இந்த குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு தேர்வுக்காக தயாராகி வந்த பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், குரூப் 2 தேர்வுக்காக ஹைதராபாத்தில் உள்ள அசோக்நகர் பகுதியில் தங்கி படித்து வந்த பிரவளிகா என்ற இளம்பெண் நேற்று இரவு திடீரென தற்கொலை செய்துக் கொண்டார். அவரது தற்கொலைக்கு குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவி பிரவளிகாவின் இறப்பு குறித்து தகவல் அறிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவி தங்கியிருந்த விடுதிக்கு அருகே ஒன்று திரண்டு, அவரது இறப்புக்கு நியாயம் கேட்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர். மேலும், சமூக வலைதளங்களில் #ByeByeKCR என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ல நிலையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்து பிஆர்எஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்! மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு... மகளிர் அதிர்ச்சி! பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்! அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது! இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்... 178 வருஷங்களுக்குப் பிறகான சூரிய கிரகணம்!