தூத்துக்குடியில் டாஸ்மாக் மதுபானக் கடையின் ஷட்டரை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு 10 மணியுடன் கடைகளை மூடிவிட்டு பணியாளர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதே போல் தூத்துக்குடி மாவட்டம் 2ம் ரயில்வே கேட் அருகே உள்ள சத்திரம் தெருவில் அமைந்துள்ள அரசு மதுபான கடை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் நேற்று விற்பனை அதிகளவில் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு பணியாளர்கள் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற சிலர், கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீஸார் பார்த்தபோது, கடையின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் நடைபெற்று இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சோமசுந்தரம் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள மதுபானக் கடையில் நிகழ்ந்துள்ள இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களமிறங்கிய அமைச்சர்; அதிர்ந்த தொண்டர்கள்
தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
பிக் பாஸ்7 முடிவில் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்!
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம்!
இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்... பனிமூட்டத்தால் 17 விமானங்கள் ரத்து!