அதிர்ச்சி... ஜாமீனில் வந்து சிறுமியுடன் பாலியல் உறவு... 19 வயது இளைஞர் மீண்டும் கைது

By காமதேனு

திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, தனுஷ் (எ) ஆதி (19) என்ற இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு அந்த இளைஞர் பிணையில் இருந்தார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு அந்த இளைஞர் மீண்டும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

வீட்டின் வெளியில் படித்துக் கொண்டிருந்த சிறுமியை, இளைஞர் வெளியே அழைத்து சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE