சினிமா பாணியில் நடந்த பயங்கரம்... துப்பாக்கியால் சுட்டு 1 கிலோ நகைக் கொள்ளை!

By காமதேனு

பெங்களூருவில நகைக்கடை உரிமையாளரைச் சுட்டு 1 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு பைடரஹள்ளியில் மனோஜ் குமார் லோஹர் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இன்று இவரது கடைக்கு இரண்டு பைக்குகளில் 4 பேர் வந்தனர். அவர்களில் மூன்று பேர் கடைக்குள் நுழைந்து ஷட்டரைப் பூட்டினர். மற்றொரு கொள்ளையன் கடைக்கு வெளியே யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் திடீரென கடை உரிமையாளர் மனோஜை துப்பாக்கியால் சுட்டு விட்டு 1 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஆனாலும், காலில் குண்டு காயமடைந்த மனோஜ், அவர்களை விடாமல் பைக்கில் துரத்திச் சென்றார். சாலையின் சென்றவர்களின் உதவியுடன் கொள்ளையர்களில் ஒருவரை மனோஜ் பிடித்தார்.

ஆனால், துப்பாக்கியைக் காட்டி அவர் தப்பிச் சென்றார். இதையடுத்து சேஷாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் சேர்க்கப்பட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து மேற்கு பிரிவு டிசிபி கிரிஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நகைக்கடையில் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்க நகை திருடப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைத்துள்ளோம். குற்றவாளிகள் இரண்டு பைக்குகளில் வந்து ஒரு பைக்கை விட்டு விட்டுத் தப்பியுள்ளனர். அந்த வாகனத்தை வைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்" என்றார்.

சினிமா பாணியில் பட்டப்பகலில் பெங்களூருவில் நகைக்கடை உரிமையாளரை சுட்டு விட்டு 1 கிலோ தங்கநகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE