ஈரோட்டில் பரபரப்பு... ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

By காமதேனு

ஈரோடு அருகே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகனின் தந்தை மற்றும் மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவர் இதற்கு முன்பு பள்ளி கல்வித்துறை இணை இயக்குநராக பதவி வகித்திருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார்கள் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று ஈரோட்டில் உள்ள அவரது தந்தை மற்றும் மாமனார் வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வர முருகன் சென்னையில் வசித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் பகுதியில் அவருக்கு சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய் மற்றும் தந்தை வசித்து வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக புகார்

இன்று காலை 6 பேர் கொண்ட குழுவினர் ராமேஸ்வர முருகனின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்து யாரையும் வெளியே அனுப்பவும், வீட்டுக்குள் யாரும் செல்லவும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் சோதனையிட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொலைபேசி இணைப்பையும் துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடை நம்பி என்பவரது வீடு ஈரோடு அக்ரஹாரா வீதியில் உள்ளது. இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது வீட்டிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி… தடம் புரண்ட விரைவு ரயில்... 6 பேர் பலி... பலர் காயம்!

ரூ. 3.48 கோடியை குப்பையில் கொட்டிய தமிழக அரசு; மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1,00,000 சிம்கார்டுகள் வீணடிப்பு!

HBD SNEHA : ‘புன்னகை இளவரசி’ நடிகை சிநேகா பிறந்தநாள்!

போலி சான்றிதழ்... 24 வருடமாக வேலை செய்த அரசு பள்ளி ஆசிரியை!

அதிர்ச்சி... நள்ளிரவில் வெடித்து சிதறிய செல்போன் சார்ஜர்; பற்றி எரிந்த வீடு... 3 பேருக்கு தீவிர சிகிச்சை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE