சென்னையில் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து சென்றவருக்கு தானியங்கி கேமரா மூலம் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் கட்டாயம் குறித்தும், உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏஎன்பிஆர் (Automatic Number Plate Recognition) எனப்படும் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு காண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கேமரா மூலம் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது. இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய நாளில் இருந்து பல்லாயிரம் பேருக்கு மேல் தானியங்கி கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி ஹெல்மெட் அணியாமல் சென்றது போன்று அபராதம் விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டி ஒருவருக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ஆயிரம் ரூபாய் அபராதம் நேற்று விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவருக்கு சென்னை பெருநகர காவல் துறை புகைப்படத்துடன் கூடிய செலான் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று பல்வேறு இடங்களில் தொடர்ந்து சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும், உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!