காதல் விவகாரத்தில் பயங்கரம்: காதலனின் தந்தை அடித்துக் கொலை!

By காமதேனு

சேலம் அருகே காதல் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞரின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தென்னம்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரனின் மகன் பிரசாந்த் (25). இவரும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு கைக்கலப்பாக மாறிய நிலையில், இருதரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். அதில் பிரசாந்தின் தந்தை குணசேகரனை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குணசேகரனை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்டவர்கள்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் இளம் பெண்ணின் உறவினர்கள் முருகேசன், சிவக்குமார் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் இளைஞரின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE