பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை - சென்னையில் பரபரப்பு

By KU BUREAU

சென்னை: பாலவாக்கத்தில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2023-ம் ஆண்டு சிபிஐ பதிந்த வழக்கின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது சிலை கடத்தல்காரர்களுடன் கூட்டு சேர்ந்து பொன். மாணிக்கவேல் சதியில் ஈடுபட்டதாக அதே பிரிவில் பணியாற்றி இடைநீக்கம் செய்யப்பட்ட காதர் பாட்ஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், 2023ல் சிபிஐ பதிந்த வழக்கின் அடிப்படையில், சென்னை பாலவாக்கத்தில் பொன். மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கு குறித்து பொன். மாணிக்கவேலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனையின் முடிவிலேயே அவரது வீட்டில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் எந்த மாதிரியான விசாரணை நடத்தப்பட்டது என்கிற விவரங்கள் வெளியாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE