இஸ்ரேல் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உறுதுணையாக இந்தியா என்றைக்கும் நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன போராளிகளான ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் எல்லைக்குள் இன்று காலை முதல் திடீர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எல்லை நெடுக இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றுக்கு அப்பால், காஸாவிலிருந்து ஏவப்படும் ஆயிரக்கணக்கிலான ஏவுகணைகளால் இஸ்ரேல் எல்லைக்குள்ளும் பதற்றம் சூழ்ந்துள்ளது.
மோதல் ஆரம்பித்த 20 நிமிடங்களில் ஆயிரக்கணக்கிலான ராக்கெட்டுகளை இஸ்ரேல் எல்லைக்குள் ஏவி ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் தரப்பில் 5000 என்றும், சர்வதேச ஊடகங்கள் சார்பில் 2000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் எனவும் கணக்கு சொல்கிறார்கள். இந்த திடீர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் போருக்குத் தயார் என அறிவித்ததோடு, பதிலடி மற்றும் நேரடி மோதல்களை தொடங்கியுள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளத்தில், ‘’இஸ்ரேல் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!