அதிகாலையில் அதிர்ச்சி... பற்றி எரிந்த ஏடிஎம் இயந்திரம்... பல லட்ச ரூபாய் எரிந்து நாசம்!

By காமதேனு

சென்னையில் தனியார் ஏடிஎம் மையம் மற்றும் ஓட்டலில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்ச ரூபாய் தீயில் எரிந்து நாசமானது.

தீ விபத்து நடந்த இடம்

சென்னை புழல் கேம்ப் நெடுஞ்சாலையில் ஓட்டலும், அதன் அருகே இந்தியா ஓன் என்ற தனியார் ஏடிஎம் மையமும் இயங்கி வருகிறது. நேற்றிரவு ஓட்டலில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் அனைவரும் ஓட்டலை பூட்டிவிட்டு சென்றனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஓட்டல் அருகே இருந்த ஏடிஎம் மையம் திடீரென தீபிடித்து எரிந்தது. பின்னர் தீ ஓட்டலுக்கு பரவியது. அடுத்து ஏடிஎம் மையம், ஓட்டல் இரண்டும் கொழுந்து விட்டு எரிந்தது.

தீ விபத்தில் எரிந்த ஏடிஎம் இயந்திரம், ஓட்டல்

அப்போது அவ்வழியாக வந்த அப்பகுதி மக்கள் தீ பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனே காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் செங்குன்றம், மாதவரம் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் விரைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரம், ஓட்டலில் இருந்த மேஜை நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாயின.

ஏடிஎம் இயந்திரம் முற்றிலும் எரிந்ததால் அதில் இருந்த பல லட்ச ரூபாய் தீயில் எரிந்து கருகியது தெரியவந்தது. ஆய்வு செய்த பிறகே எவ்வளவு பணம் தீயில் கருகியது என்பது குறித்த தகவல் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீவிபத்து குறித்து புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக ஏடிஎம் மையத்தில் தீப்பற்றியதும் பின்னர் தீ அருகில் இருந்த ஓட்டலுக்கு பரவியதும் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE