உங்க அப்பன் வீட்டு வண்டியா? பெண்ணிடம் ஆவேசப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர்... வைரலாகும் வீடியோ!

By காமதேனு

நீலகிரியில் அரசு பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை தட்டி கேட்ட பெண்ணை , இது உங்க அப்பன் வீட்டு வண்டியா என ஓட்டுநர் வசைப்பாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து அய்யங்கொள்ளி பகுதிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை அய்யங்கொள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு இருந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. அங்கு பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கிட்டத்தட்ட 4 மணி நேரமாக பேருந்துக்காக காத்திருந்துள்ளார். பேருந்து வந்தும் கை காட்டி நிறுத்தியுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் நிற்காமல் சென்றுள்ளார்.

சம்பந்தப்பட்ட அந்தப்பேருந்து, அடுத்த நிறுத்தமான அய்யங்கொள்ளியில் நின்றுள்ளது. இதற்கிடையே ஜீப்பில் ஏறி பேருந்தை மடக்கிப்பிடித்த அப்பெண், ’கைக்குழந்தையோடு 4 மணி நேரமாக காத்திருக்கிறேன். கையைக்காட்டியும் வண்டியை ஏன் நிறுத்தவில்லை?’ பேருந்து ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு கோபமாக பதிலளித்த ஓட்டுநர், நீங்க கையை எல்லாம் காட்டவில்லை என கூறியதோடு இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா? என கடுமையாக வசைப்பாடியுள்ளார். இதனை அங்கிருந்தவர் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சபரிமலையில் தமிழக பக்தர்கள் மீது கொடூர தாக்குதல்... கேரள போலீஸ் அடாவடி

அதிர்ச்சி... விமான விபத்தில் பிரபல நடிகர், 2 மகள்கள் உயிரிழப்பு

ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு... திமுக தலைமை அறிவிப்பு!

இன்னும் முடியாத மீட்பு பணி... ஜப்பான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!

காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. 7 பெட்டிகளின் கண்ணாடி உடைப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE