500 ரூபாய் தரமறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்து விட்டு கீழே விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலியைச் சேர்ந்தவர் திரிலோகி. செங்கல் சூளைத் தொழிலாளி. இவரது மகன் சஞ்சய்(25). இந்த நிலையில் திரிலோகி ஜனவரி 1-ம் தேதி கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சஞ்சய் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது தந்தை கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட்டதாக சஞ்சய் கூறினார். இதையடுதது திரிலோகி வேலை செய்த செங்கல் சூளையில் விசாரணை நடத்தியதுடன், அவரின் செல்போனையும் தேடினர்.
அப்போது போலீஸாருக்கு அவரது செல்போன் கிடைத்தது. கடைசியாக அவரது மகனான சஞ்சய் பேசியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து செங்கல் சூளை உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, கொலை நடந்த அன்று திரிலோகியின் செல்போனுக்கு அவரது மகன் சஞ்சய் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனக்கு 500 ரூபாய் வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் செங்கல் சூளை உரிமையாளரிடம் இதைக்கூறி திரிலோகி 500 ரூபாய் கேட்டுள்ளார். அப்போது, இந்த செல்போன் உரையாடலை போலீஸார் கேட்ட போது, அது உண்மை எனத் தெரிய வந்தது.
இதையடுத்து சஞ்சயை பிடித்து போலீஸார் உரிய முறையில் விசாரணை நடத்திய போது, தனது தந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 500 ரூபாய் கேட்டு தனது தந்தையை மிரட்டியதுடன், மரப்பலகையால் தந்தையின் தலையில் அடித்ததாகவும், இதனால் மயங்கி விழுந்த அவருக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் கூறினார்.
இதனால் கீழே விழுந்து தனது தந்தை இறந்து விட்டதாக நாடகமாடியதாக சஞ்சய் கூறினார். இதையடுத்து அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். 500 ரூபாய்க்காக தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் ரேபரேலி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சபரிமலையில் தமிழக பக்தர்கள் மீது கொடூர தாக்குதல்... கேரள போலீஸ் அடாவடி
அதிர்ச்சி... விமான விபத்தில் பிரபல நடிகர், 2 மகள்கள் உயிரிழப்பு
ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு... திமுக தலைமை அறிவிப்பு!
இன்னும் முடியாத மீட்பு பணி... ஜப்பான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!
காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. 7 பெட்டிகளின் கண்ணாடி உடைப்பு!