ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்; மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன்

By காமதேனு

ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் அடிமையான 17 வயது சிறுவன் ஒருவன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணத்தை சேர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் 11ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் போனில் தொடர்ச்சியாக ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளான். ஒரு கட்டத்தில் விளையாட்டுக்கு முற்றிலும் அடிமையான அந்த சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் இரவிலும் கூட தூங்காமல் தொடர்ந்து விளையாடி கொண்டிருந்துள்ளான்.

இதனால் அச்சிறுவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதோடு, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கை, கால்களும் நிலையாக இல்லாமல் போனது. இதையடுத்து பெற்றோர் சிறுவனை கண்காணித்து, உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் முற்றிலுமாக மனநலம் பாதித்த நிலையில் இருப்பதை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். அச்சிறுவனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.

விளையாட்டு வினையானது என்பதற்கு ஏற்ப விளையாட்டு மோகத்தில் இருந்த மாணவன், அதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் நிலையாக இல்லாததால் அவை கட்டப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE