பரேலி: உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் உள்ள பீதாம்பர்பூர் ரயில் நிலையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 6 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் உள்ள பீதாம்பர்பூர் ரயில் நிலையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 6 வயது சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தெற்கு காவல் உதவிக் கண்காணிப்பாளர் மனுஷ் பரீக் கூறுகையில், இந்த சம்பவத்தில் கொலைக்கான முகாந்திரம் இல்லை. சிறுமி ரயிலில் அடிபட்டிருக்கலாம் அல்லது ஏதேனும் காட்டு விலங்குகள் தாக்கி, சிறுமியின் உடலை இழுத்துச் சென்று தலையை துண்டித்திருக்கலாம்.
சிறுமி இறந்து 7 முதல் 8 நாட்கள் ஆகியிருக்கக் கூடும். சிறுமியின் இறப்புக்கான காரணம் பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்படும். எனினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
» கேரளாவுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிவாரணம்: 2 ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!