தற்கொலை செய்ததை லைவ் செய்த இளம்பெண்: கணவர் மீது பரபரப்பு புகார்

By KU BUREAU

பெங்களூரு: கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதாக வீடியோ வெளியிட்ட பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆந்திரஹள்ளியைச் சேர்ந்தவர் திலீப். இவருக்கும் மானசா(25) என்ற பெண்ணுக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திலீப், வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மானசாவிற்கும், அவரது கணவர் திலீபிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திரஹள்ளியில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு மானசா நேற்று மாலை வந்தார். அங்கு தனது கணவர் திலீப்பிற்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் தகாத உறவு இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்ட மானசா, சிறிது நேரத்தில் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த படரஹள்ளி காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து, மானசா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திலீப் மற்றும் அவரது குடும்பத்தாரால் தான் தங்கள் மகள் உயிரை இழந்துள்ளார் என்று மானசாவின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக படரஹள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லைவ் வீடியோவில் கணவர் மீது புகார் கூறி விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE