ஆவடியில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

By KU BUREAU

திருவள்ளூர்: ஆவடி அருகே விமானப் படைதளத்தில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பகுதியில் இந்திய விமானப் படை தளம்செயல்பட்டு வருகிறது. இதில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், பாளையக்காரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான காளிதாஸ் (55), கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.

இந்நிலையில் காளிதாஸ் கடந்த இரு நாட்களாக, ஆவடி விமானப் படை தளத்தின் 8 -ம் எண் கொண்ட கோபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இச்சூழலில், காளிதாஸ் நேற்று அதிகாலை 4 மணியளவில் பணியில் இருந்தபோது, அவர் பயன்படுத்தி வந்த ‘ஏ. கே. 47’ ரககை துப்பாக்கியால், தொண்டையில் தனக்குத் தானே சுட்டுக் கொண்டார். 3 தோட்டக்கள் தொண்டையில் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே காளிதாஸ் உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த முத்தாபுதுப்பேட்டை போலீஸார், சம்பவ இடம் விரைந்து, காளிதாஸின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், காளிதாஸ் பணி சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண் டாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE