சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிகொண்டிருந்தனர்.
அப்போது, சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த விக்னேஸ்வரன் ராஜா (35) என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது, காப்பி மேக்கர் இயந்திரம் ஒன்று இருந்தது.
அந்த இயந்திரம் வழக்கத்தைவிட எடை அதிகமாக இருந்ததால், அதனை திறந்து சோதனை செய்தனர். அதில், ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ எடை கொண்ட2 தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
» தமிழகம் முழுவதும் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
» இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள்: அண்ணாமலை நம்பிக்கை
தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணைநடத்தியதில், அவர் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.