மனைவியுடன் தகராறு: 2 வயது மகனை மாடியிலிருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை

By காமதேனு

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டெல்லியின் கல்காஜியை சேர்ந்த நபர் தனது இரண்டு வயது குழந்தையை முதல் மாடியில் இருந்து வீசிவிட்டு, அவரும் மூன்றாவது மாடியில் இருந்து குறித்துள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் விசாரணையில், “மான் சிங் என்பவர், நேற்று மாலை தனது மனைவியின் பாட்டியுடைய வீட்டின் முதல் மாடியிலிருந்து தனது குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு, அவரும் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்தார். அந்த குழந்தை தற்போது ஹோலி பேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மான் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என கூறப்பட்டுள்ளது

மான் சிங்கின் மனைவி பூஜா, தனது கணவருடன் தனக்கு நல்ல உறவு இல்லை என்றும், கடந்த சில நாட்களாக தனது இரண்டு குழந்தைகளுடன் பாட்டியுடன் வசித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் அவரது கணவர் நேற்று மாலை 6-7 மணியளவில் மது போதையில் வந்து தகராறு செய்துள்ளார். அப்போது அவர் திடீரென மகனை முதல் மாடிக்கு தூக்கிச்சென்று கீழே வீசியுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE