எம்எல்ஏ மீது பாலியல் பலாத்கார வழக்கு

By காமதேனு

தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஆபாச அத்துமீறல்களால் துன்புறுத்தியதாகவும் மத்திய பிரதேச முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏ-வுமான உமங் சிங்கர் என்பவர் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் முதல்வர் கமல்நாத்தின் கீழ் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் உமங் சிங்கர்.48 வயதாகும் இவர் தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் காந்த்வானி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தார் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் பலத்காரம் உள்ளிட்ட பல்வேறு புகார்களின் கீழ் உமங் சிங்கருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும், இதற்காக தன்னை ஏடாகூடமான வகையில் எடுத்த வீடியோக்களை காட்டியே பிளாக்மெயில் உறவில் ஈடுபட்டதாகவும் எம்எல்ஏக்கு எதிரான புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார். காவல்துறையிடம் புகார் அளிக்கப்போவதாக முன்னதாக அந்த பெண் தெரிவித்ததை தொடர்ந்து, ஏப்ரல் மத்தியில் போபாலில் வைத்து தன்னை திருமணம் செய்துகொண்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னரும் தனது விருப்பத்துக்கு மாறாக எம்எல்ஏவின் பாலியல் அச்சுறுத்தல்கள் தொடர்ந்ததாகவும் அந்த பெண் புகாரளித்துள்ளார்.

இயற்கைக்கு மாறான உறவு, குடும்ப வன்முறை, ஆபாச அச்சுறுத்தல் தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழும் எம்எல்ஏவுக்கு எதிரான புகார்கள் நீள்கின்றன. எம்எல்ஏ உமங் சிங்கர் மீது ஞாயிறு அன்று வழக்கு பதிவுசெய்யப்பட்டதை மபி போலீஸார் இன்று(நவ.21) உறுதி செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE