லெஸ்பியன் குற்றச்சாட்டு; அந்தரங்க உறுப்பில் சூட்டுக்கோல்: நிர்பயாவுக்கு நிகரான மேற்குவங்க சம்பவம்

By காமதேனு

பெண்கள் இருவரை ஓரினச் சேர்க்கையாளர்கள் என அடித்து துன்புறுத்தியதோடு, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக 3 ஆண்கள் மீது மேற்குவங்கத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முர்ஷிதாபாத் பகுதியில் அக்.25 அன்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நவ.3 அன்று காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தோழியர் இருவர் ஒரே அறையில் உறங்கியது தொடர்பாக 3 ஆண்களும், பெண்களை சூழ்ந்து தாக்கி உள்ளனர். இருவரையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என குற்றம்சாட்டி பெண்களின் பிறப்பு உறுப்பில் காய்ச்சிய கம்பியால் சூடு போடவும் செய்துள்ளனர். அந்த பெண்கள் தப்பிச் சென்று அருகிலுள்ள வயல் பகுதியில் பதுங்கியபோது அவர்களை தேடிப் பிடித்து பாலியல் பலாத்காரமும் செய்ய முயன்றுள்ளனர்.

3 ஆண்களில் ஒருவர், இரு பெண்களில் ஒருவரது உறவினர் ஆவார். ஷேக் என்ற அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ளா கதம் மற்றும் சாகேப் என்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இரும்பு கம்பி, மது பாட்டில்கள் ஆகியவற்றால் தாக்கியது, பலாத்காரத்துக்கு முயன்றது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE