காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெருவை சேர்ந்தவர் உமாபதி மகன் ராஜா (35). இவர் காஞ்சிபுரம் சேலை ராமசாமி தெருவில் உள்ள ஹரிகரன் என்பவரின் வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். ஹரிகரன் கடந்த 2014-ம்ஆண்டு வாங்கிய வேனுக்கு கடனைசெலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அப்போது தனது ஓட்டுநர்ராஜாவிடம் ரூ.50,000 கடன் வாங்கிநிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராஜாகடனை திருப்பிக் கேட்டபோது,ஹரிகரன் காலதாமதப்படுத்தியுள் ளார். ராஜா நெருக்கடி கொடுத்ததைத் தொடர்ந்து ஹரிகரன் தன்னிடம் இருந்த 1 பவுன் நகையை அடகு வைத்து ரூ.34 ஆயிரம் கொடுத்துள்ளார். மீதம் உள்ள ரூ.16 ஆயிரத்தை ராஜா தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.
இதில் ராஜாவுக்கும், ஹரிஹரனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹரிகரன் வீட்டுக்கு வந்த ராஜா, அவரை குத்திக் கொலை செய்தார். தடுக்க வந்த ஹரிஹரன் மனைவியையும் தாக்கினார். இது குறித்து சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் அரசு தரப்பில்கூடுதல் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்தகாஞ்சி கூடுதல் அமர்வு, மாவட்டநீதிபதி சரவணகுமார், குற்றம்சாட்டப்பட்ட ராஜாவுக்கு கொலைகுற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், கொலை செய்யும் நோக்கத்துடன் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்காக 5 வருட கடுங்காவல் தண்டனையும், உயிரிழந்தவரின் மனைவிராஜேஸ்வரிக்கு காயத்தை ஏற்படுத்தியதற்காக 1 வருட கடுங்காவல் தண்டனையும், மேலும் ரூ.5 ஆயிரம்அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
» தூத்துக்குடியில் 13 பேர் இறப்புக்கு காரணமான அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு