மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: மகன் மகளுடன் உயிரிழந்த மருத்துவர்

By காமதேனு

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் உள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவமனையின் நான்காவது மாடியில் வசித்து வந்த மருத்துவர், அவரது மகன், மகள் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா பகத்சிங் காலணியில் டாக்டர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் நான்கு மாடிகள் கொண்ட மருத்துவமனை கட்டியுள்ளார். மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முழுதாக முடியவில்லை. அதேநேரத்தில் நான்காவது மாடியில் மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி தன் குடும்பத்துடன் வசித்துவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் நான்காவது மாடி திடீரென தீப்பிடித்து எரிந்தது. மருத்துவரும், அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை.

அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இருவரை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி, அவரது மகன் சித்தார்த் ரெட்டி, மகள் கீர்த்திகா ஆகியோர் மீட்கப்பட்டனர். இவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சைப் பலனின்றி மூவரும் உயிர் இழந்தனர். மின் கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE