சென்னை: சென்னைக்கு போதை மாத்திரைகளைக் கடத்தியதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அம்மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளன. தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வடசென்னை தனிப்படை போலீஸார் கண்காணித்தபோது, தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 6 பேரை பிடித்துவிசாரித்தனர். அவர்களிட மிருந்து 621 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
» நியோ மேக்ஸ் விசாரணையை 15 மாதங்களில் முடிக்க வேண்டும்: பொருளாதார குற்றப் பிரிவுக்கு ஐகோர்ட் உத்தரவு
» காவிரி நீரை பெறுவதற்காக கர்நாடகா அரசை எதிர்த்து போராடவும் தயார்: செல்வப்பெருந்தகை தகவல்
இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆன்லைன் வாயிலாக உத்தர பிரதேசத்திலிருந்து சென்னைக்கு போதை மாத்திரைகளை அனுப்பி வைத்த தாக அம்மாநிலத்தைச் சேர்ந்த விபின் திவாரி (40)என்பவரை அம்மாநிலம்சென்று சென்னை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.