ஆந்திராவில் குடிபோதையில் தனது தாய்க்கு பாலியல் தொந்தவு கொடுத்த நபரை, இளைஞர் ஒருவர் அடித்துக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நேற்று காலையில் விசாகப்பட்டினம் அல்லிபுரம் பகுதியில் பிரசாத் (23) என்பவரால், 45 வயதான ஸ்ரீனு என்பவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
முன்னதாக ஸ்ரீனு குடிபோதையில், பிரசாத்தின் தாய்க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. வீடு திரும்பியதும் தன் மகனிடம், தனது நேர்ந்த கொடுமையை அப்பெண் கூறியுள்ளார். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த இளைஞர், குடிபோதையில் இருந்த ஸ்ரீனுவை சரமாரியாக கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளில், அந்த இளைஞர் குடிபோதையில் இருந்தவரைப் பின்தொடர்ந்து ஓடுவதும், சில நிமிடங்களுக்குப் பிறகு அவரது உயிரற்ற உடலைத் தூக்கிச் சென்று அவரது தாய்க்கு அருகே சாலையில் போடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
ஸ்ரீனு இறந்துவிட்டதை உறுதிசெய்த பிறகு அந்தப் பெண்ணும் அவரது மகனும் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தற்போது பிரசாத்தையும் அவரது தாயையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.