8-ம் வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த இரண்டு குழந்தைகளின் தாய்: வலைவீசிப் பிடித்த போலீஸ்!

By காமதேனு

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 15 வயது சிறுவனுடன், இரண்டு குழந்தைகளின் தாயான 30 வயது பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜூலை 19-ம் தேதி முதல் குடிவாடா நகரைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் காணாமல் போனதாக, அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா என்ற பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சிறுவன் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், எட்டாம் வகுப்பு படிக்கும் மைனர் சிறுவனுக்கும் அப்பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இவர்களைத் தேடி வந்தோம். ஹைதராபாத்தில் உள்ள பாலாநகரில் ஜூலை 26 அன்று அந்த பெண் மற்றும் சிறுவன் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று குடிவாடா டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா ராவ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE