கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

By காமதேனு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பள்ளியில் மாணவி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இன்று வன்முறை வெடித்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபுவுடன் நேரடியாக ஆய்வு செய்த பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, “ வதந்திகளை நம்பி மக்கள் வன்முறையில் இறங்க வேண்டாம். பெற்றோரின் கோரிக்கை குறித்து தனியாகவும், வன்முறை தொடர்பாக தனியாகவும் விசாரணை நடத்தப்படும். மாவட்ட நிர்வாகம் இதுவரை தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.” என தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக இன்று குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர், பள்ளி வாகனங்கள், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும்போலீஸ் வாகனங்களுக்கும் தீவைத்தனர். தற்போது போராட்டக்காரர்களை விரட்டியடித்த பின்பு போலீசாரின் கட்டுப்பாட்டில் பள்ளி வளாகம் வந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE