டியூசன் படிக்க வந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை...வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி பேராசிரியர்!

By காமதேனு

மும்பையில் 42 வயதான கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனது மாணவியை இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள மும்பையின் மேற்கு புறநகரில் உள்ள கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடம் கற்பிக்கும் பேராசிரியர், பிப்ரவரி 2020 மற்றும் பிப்ரவரி 2022 க்கு இடையில் டியூஷனுக்கு வந்த மாணவியான பாதிக்கப்பட்ட சிறுமியை ​​​​கல்லூரி வளாகத்திலும் அவரது வீட்டிலும் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது 18 வயதாகும் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது சிறுமியாக இருந்தார். 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராசிரியரின் வீட்டிற்கு கல்வி கற்பதற்காக அந்த மாணவி சென்றிருந்தபோது, ​​முதன்முதலாக பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக அந்த இளம்பெண் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன்பின்னர், நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்த சிறுமியை மிரட்டிய அவர், படம் பிடித்த வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்புவதாக மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்

இது தொடர்பாக பேசிய டிசிபி மகேஷ்வர் ரெட்டி, “இந்த ஆண்டு பிப்ரவரி வரை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை தொடர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நகரத்தை விட்டு உதய்பூருக்கு மேல் படிப்பிற்காக சென்றபோதும்கூட அந்த பேராசிரியர் ​​​​தொடர்ந்து மிரட்டியுள்ளார். அதன்பின்னர் பெற்றோரிடம் நடந்தவற்றை சொன்ன அந்த மாணவி காவல்துறையில் புகார் அளித்தார். குற்றம்சாட்டப்பட்ட அந்த பேராசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அவரை கைது செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் வேறு யாரேனும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE